ஜீவகாருண்யம் என்றால் என்ன

jeevakarunyam in tamil

இன்று உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் அன்பு மற்றும் கருணையில்லாமை ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு உயிர்களின் மீது அன்பு காட்டுவதே எம்மை மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

அதாவது ஜீவகாருண்யமுடைய ஒருவரே சிறந்த குணமுடையவர் என்பதோடு மட்டுமல்லாமல் இரக்க குணமானது அனைவரிடத்திலும் காணப்படும் ஒரு சிறந்ததொரு குணமாகும்.

ஜீவகாருண்யம் என்றால் என்ன

ஜீவகாருண்யம் என்பது யாதெனில் மனிதர்களானவர்கள் பிற மனிதர்கள் மீது மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளின் மீதும் கருணை காட்டுவதாகும். அந்த வகையில் ஜீவகாருண்யமானது அனைத்து உயிரினங்களையும் சிறந்த முறையில் வழிநடாத்த துணை புரிகின்றது.

மேலும் இன்று பல்வேறுபட்ட நபர்கள் அன்பின்றி காணப்பட்ட போதிலும் சிலர் எப்பொழுதும் உயிரினங்களை துன்புறுத்துவது பாவம் என்றே கருதி வருகின்றமை ஜீவகாருண்யத்தினையே எடுத்தியம்புகின்றது.

இறைவனை நெருங்குவதற்கான சிறந்ததொரு திறவுகோலாகவும் இவ் ஜீவகாருண்யமே திகழ்கின்றது எனலாம். மேலும் எந்த ஒரு உயிரியும் தம்மை போன்றதொரு உயிரே என்ற எண்ணமே எம்மை ஜீவகாருண்யமிக்கவர்களாக உருவாக்குகின்றது.

வள்ளலாரும் ஜீவகாருண்யமும்

ஜீவகாருண்யம் ஒரு தனிமனிதனுடைய வாழ்வில் மிக முக்கியத்துவமிக்கதொன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் வள்ளலாரானவர் ஜீவகாருண்யம் பற்றி கூறுகையில் மனிதர்களுடன் மட்டுமின்றி இவ்வுலகில் காணப்படும் அனைத்து ஜீவராசிகளின் மீதும் காருண்யமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையே கூறியுள்ளார்.

அத்தோடு மோட்ச வீட்டின் திறவுகோலே ஜீவகாருண்யமாகும் எனவும் வள்ளாலர் சுட்டிக்காட்டியுள்ளதோடு வள்ளலார் முதன் முதலாக இயற்றிய நூலாக காணப்படுவது ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

அந்த வகையில் இவ் நூலில் பல்வேறு ஜீவகாருண்ய பண்புகளை விளக்குகின்றார். அதாவது ஒரு உயிருக்கு பசியின் காரணமாக ஏற்படும் துன்பத்தை போக்குவதே நாம் அடையும் மேலான இன்பமாகும்.

அதுபோல கடவுளின் அருளை சிறப்புறப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளில் ஒன்றாகவும் இதுவே திகழ்கின்றது. இவ்வாறாக ஜீவகாருண்யத்தின் முக்கியத்துவத்தை வள்ளாலர் சுவாமிகள் எடுத்தியம்பிய போதிலும் ஜீவகாருண்யத்தை இரண்டு வகைகளாக பிரித்து நோக்குகின்றனர். அதாவது அபர ஜீவகாருண்யம் மற்றும் பர ஜீவகாருண்யமாகும்.

இவற்றுள் பர ஜீவகாருண்யமானது பசியினைப் போக்க உயிர்களுக்கு உதவுதல், உயிர்களை கொலை செய்யாதிருத்தல் போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் அபர ஜீவகாருண்யமானது மனிதர்களுடைய வாழ்வில் இடம்பெறும் பல்வேறு துன்பங்களை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக திருமணத்தின் போது வாழ்க்கைத் துணை அமையாமை, ஆசைப்பட்ட பொருட்கள் கிடைக்கப்பெறாமை என பல்வேறு துன்பங்களுக்கு உதவுவது ஓர் ஜீவகாருண்யமுடைய செயலாகும்.

மேலும் ஒரு மனிதனானவன் பசியினால் வாடுகின்ற போது அவர் மீது எதுவித பாராபட்சமும் காட்டாது அவரது பசியினை போக்குவதே சிறந்த ஜீவகாருண்யமாகும் எனவும் வலியுறுத்தி கூறுகின்றார்.

இஸ்லாத்தின் பார்வையில் ஜீவகாருண்யம்

இஸ்லாமிய மார்க்கமானது அனைவரிடத்திலும் அன்பு காட்டும் ஒரு மார்க்கமாகும் என்ற வகையில் இஸ்லாத்தில் ஜீவகாருண்யத்தின் முக்கியத்துவமானது பேசப்பட்டு கொண்டு வரும் விடயமாகும். அந்தவகையில் ஜீவகாருண்யத்தை எடுத்தியம்பும் விதமாக இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் பின்வருமாறு விளக்குகின்றது அதாவது,

எவர் ஒருவர் பூமியில் உள்ளவற்றின் மீது இரக்கம் காட்டுகின்றாரோ அவர் மீது வானத்தில் உள்ளவன் இரக்கம் காட்டுவான் (திர்மிதி)

அத்தோடு தாகத்தோடு வந்த நாய் ஒன்றுக்கு நீர் புகட்டியதன் மூலம் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டமை, ஒரு பெண் பூனைக்கு உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு இறக்கச் செய்ததற்காக நரகம் கிடைக்கப்பெற்றமை போன்ற ஹதீஸ்கள் ஜீவகாருண்யத்தையே எடுத்துக் கூறுவதாக அமைகின்றது.

அதுபோன்றே இவ் உலகில் பிறந்த அனைத்து உயிர்களையும் மதித்து நடத்தலோடு மாத்திரம் நின்று விடாமல் அவ் உயிர்களின் மீது கருணையோடும் பாசத்தோடும் நடந்து கொள்ளல் கட்டாயமானதொரு கடமையாகும். மேலும் ஒரு மனிதனானவன் பிரிதொரு மனிதனிடம் காட்டும் அன்பானது அதிக நன்மைகளைக் ஈட்டி தரக்கூடியதொரு செயலாகும்.

ஜீவகாருண்யத்தின் முக்கியத்துவம்

ஜீவகாருண்யமானது பல்வேறுபட்ட துன்பங்களிலிருந்து எம்மை காக்கின்றது. அந்த வகையில் ஒரு மனிதரிடத்தில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நிவர்த்தி செய்வதொன்றாக இச்செயல் காணப்படுவதோடு மேலும் தன்னை வளர்த்த எஜமானை காப்பதற்காக உதவி செய்கின்ற செல்லப்பிராணிகள், தன்னுடைய செல்லப்பிராணிகள் இறந்து விட்டால் அதற்காக கவலை அடையும் மனிதர்கள் என பல்வேறு செயல்கள் ஜீவகாருண்யத்தின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றது.

எந்தவொரு மனிதனும் ஜீவகாருண்யத்தை பின்பற்றி வாழ்கின்ற போதே அவனது வாழ்வானது சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்லும் அத்தோடு ஒவ்வொரு உயிர்களின் மீதும் அன்பு காட்டுதலை இன, மத பேதமின்றி சிறந்த முறையில் காட்டுவதே ஜீவகாருண்யத்தின் அடிப்படையாகும்.

திருவாதிரை என்றால் என்ன