தலையங்கம் என்றால் என்ன

thalaiyangam enral enna

ஒரு இதழ்களில் இடம்பெறுகின்ற செய்திகளுக்கெல்லாம் தலையாக அமைவது, இதழ் நடத்துபவரின் எழுத்தாக அமைவது தலையங்கம் எனப்படுகின்றது. Editorial என இதனை ஆங்கிலத்தில் அழைப்பர். இதழ் ஆசிரியரும், படிப்பவரும் தொடர்பு கொள்ளும் இடமாக தலையங்கம் விளங்குகின்றது. இது ஆசிரியர் பகுதி எனவும் அழைக்கப்படுகின்றது.

தலையங்கம் இல்லாத இதழ்களும் உண்டு. அதே சமயத்தில் தமது விருப்பின்படி தலையங்கத்தை அமைத்துக் கொள்ளும் இதழ்களும் உண்டு. சிறிறிதழ்கள், வெகுசன இதழ்கள், நாளேடு ஆகிய மூன்று வகை இதழ்களிலும் தலையங்கம் இடம் பெறும். தலையங்கம் இல்லாத இதழ்களை வெளியிடுவது பொறுப்பில்லாத தன்மையென்றே கூற வேண்டும்.

தலையங்கத்தின் நோக்கம்

ஒரு தலையங்கத்தின் பொருளுக்கு ஏற்றவாறு அதன் நோக்கமும் மாற்றமடையும். இது இதழாசிரியரின் நோக்கமாக காணப்படும். அதுமட்டுமின்றி பொதுக் கருத்து வெளிப்பாடாகவும் அமைவதுண்டு. குறித்த இதழானது வெளியான காலகட்டத்தை பொறுத்து அக்கால கட்டத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் பற்றிய கருத்தாடலாகவும் அமையும்.

தலையங்கமானது கருப்பொருள், விளக்கம், முடிவு என்ற மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டமையும். அதாவது தலையங்கம் கூற இருக்கும் செய்தியின் அடிப்படையில் தலைப்பு அமையும். அதற்கான கருப்பொருளை உருவாக்கல், அதனை விளக்கிக் கூறல், அதற்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஏதும் இன்றி நடுநிலையோடு முடிவு கூறல் என அமையப்பெறும். ஒரு இதழில் தலையங்கம் அமையும் இடம் என்பது முக்கியமாகும். பொதுவாக நாளிதழ்களை நோக்கி நாளிதழ்களின் இரண்டாவது பக்கத்தில் அமையும்.

தலையங்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்கு இதயம் போல ஒரு இதழுக்கு தலையங்கம் அமைகின்றது. தலையங்கம் ஆசிரியர் எழுதும் பகுதி என்பதால் இதழின் உண்மை தன்மையை நிறுவும் பகுதியாக இது முக்கியம் பெறுகின்றது.

பொதுவாக பலரும் தலையங்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பர் இதனால் தான் குறித்த இதழில் இந்த இடத்தில் தலையங்கம் அமையும் என்று நிர்ணயித்திருப்பது இதழுக்கும், அந்த இதழைப் படிப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். ஓர் இதழின் இருப்பையும், விற்பனையையும், எண்ணத்தையும், நோக்கத்தையும் எடுத்துக் கூறுவது தலையங்கமாகும்.

தலையங்கத்தின் வகைகள்

தலையங்கம் என்பது பல வகைப்படும். குறிப்பாக தலையங்கத்தில் இடம் பெறுகின்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு அதனை பல வகையாக பிரித்துக் கொள்ளலாம்.

உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள், பொருளாதாரக் கொள்கைகள், வரவு செலவு திட்டங்கள், தேர்தல்கள், அரசியல் சிக்கல்கள் முதலானவை தலையங்கங்களின் வகைப்பாடாகும்.

பொதுவாக நீண்ட கால சிக்கல்கள் குறித்த செய்திகளும் தலையங்கங்களாக அமைவதுண்டு. உதாரணம் உக்ரைன் – ரஷ்யப் பிரச்சனை, காவிரி சிக்கல், இலங்கை பொருளாதார சிக்கல்கள், வடகொரியா சிக்கல்கள் முதலான தலையங்கங்கள் பரவலாக அனைத்து இதழ்களிலும் வெளியாவது உண்டு.

மேலும் சட்ட திட்டங்கள் பற்றிய தலையங்கங்களும் இன்றியமையாததாக அமைகின்றது.

வெளிநாட்டு அணுவாய்தக் கொள்கை, மனித உரிமைச் சட்டம், மனிதாபிமான சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், போர் குற்றச்சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், ஊடக சுதந்திரம், கல்வி நிலையங்களில் சமயம் தொடர்பான குறியீடுகளை விலக்கல், மகளிர் இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு, சமூக இட ஒதுக்கீடு, கங்கை காவிரி நீர் இணைப்புச் சட்டம் போன்றவற்றை கூறலாம்.

ரமலான் மாதத்தின் சிறப்புகள்