அனாதீனம் நிலம் என்றால் என்ன

anadeenam nilam in tamil

தமிழகத்தில் அரசு நிலங்களின் வகைப்பாட்டில் ஒன்றான அனாதீனம் நிலங்களானவை ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனை அரசனது அரசு திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் அரசே நேரடியாகப் பயன்படுத்தி வருவதனை காணலாம்.

1960 ஆம் ஆண்டுக்கு முன்பாக 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலரும் நிலம் வைத்திருந்தனர். எனினும் நில உச்சவரம்புச் சட்டம் 1961 இன் படி முப்பது ஏக்கர் நிலங்களுக்கு மேல் வைத்திருந்தவர்களிடம் அரசு மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்திக் கொண்டது. இந்த நிலங்களை இப்போது வைத்திருப்போருக்கு அரசானது பட்டா வழங்குவதில்லை.

அனாதீன சொத்து

தனியார் நிலங்களாக இருந்து அரசானது நில உச்சவரம்புச் சட்டத்தின் படி கையகப்படுத்தி தற்போது அரசனுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள சொத்துக்கள் அனைத்தும் அனாதீன சொத்து எனப்படும்.

இந்த சொத்திற்கு பலரும் உரிமையாளராக இருக்க மாட்டார்கள். அரசு புறம்போக்கு நிலங்களாகவும் இருக்காது. ஏற்கனவே பழைய ஆவணங்களின் அடிப்படையில் அந்த சொத்தானது ஒரு தனியாருக்கு சொந்தமாக இருந்து நில உச்சவரம்பு சட்டத்தின்படி அந்த சொத்தை அரசு கையகப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் தற்போது வைத்திருக்கும்.

அனாதீனம் என்பது நில உச்சவரம்பில் எடுக்கப்பட்ட மீதமுள்ள நிலத்தை மட்டும்தான் குறிக்குமா என்றால் அவ்வாறில்லை. நில சீர்திருத்தத்தின் போது ஜமீனிடமிருந்து அரசு எடுத்த உபரி நிலத்தையும் அனாதீனம் என்று குறிப்பிடுவர்.

நில வரித்திட்ட காலத்தில் ஒரு நில உரிமையாளர் பட்டா வேண்டி விண்ணப்பிக்கச் சொல்லி விண்ணப்பம் வழங்கப்பட்டது.

அந்த விண்ணப்பத்தைத் தரமலிருந்தாலோ அல்லது யாராவது பட்டா வேண்டி விண்ணப்பிக்காமல் இருந்தாலோ அல்லது பட்டா இதற்குத் தர முடியாது என பிரச்சினையுடன் இருந்தாலும்அந்த நிலங்களையும் அனாதீன நிலங்கள் என்ற வகைப்பாட்டிற்குள்ளேயே வகைப்படுத்தப்படுகின்றது.

நில உச்சவரம்புச் சட்டம்

நில உச்சவரம்புச் சட்டம் என்பது தனி நபர்களுக்குடைய நில உடமைக்கு உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு ஏதுவாக 1958 இல் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும்.

நிலம் என்பது பற்றாக்குறையான பொருளாகும். இது ஒரு சிலரிடம் மட்டுமே இருப்பது சமூகத்தில் அநீதியை உருவாக்குவதற்கு வாய்ப்பாக உள்ளது. எனவே நில உச்சவரம்புச் சட்டம் சமதர்ம சமுதாயம் ஏற்பட வழிவகுக்கும்.

நில உச்சவரம்பின் அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது. 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நில உச்சவரம்பு அளவை கொண்டு வர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரும்போது நிலமற்ற ஏழைகளுக்கு அந்த சொத்தை பகிர்ந்தளித்து அதன் அடிப்படையில் ஒரு ஒப்பனை பட்டா வழங்கப்பட்டது. அந்த சொத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஆவணம் வழங்கி இருப்பர். அந்த ஆவணம் இருந்தால் அந்த சொத்திற்கு அவர்கள் உரிமையாளர்களாக கருதப்படுவார்கள்.

அது இல்லாமல் அனாதீன சொத்தை நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின் படி சிலபேர் பட்டா வாங்க தன்னுடைய பெயருக்கு மாற்றி வைத்திருப்பர். அதன்பின் நில உச்சவரம்புச் சட்டத்தின்படி அந்நிலமானது அரசுக்கு சொந்தமானதாகவும், அனாதீன சொத்தாகவும் அனைத்து வருவாய் ஆவணங்களிலும் வரையறுத்திருக்கும்.

விரிகுடா என்றால் என்ன